×

தேர்தல் நடத்தை விதி அமல் மக்கள் குறைதீர்நாள் கூட்டம் நடைபெறாது

மயிலாடுதுறை, மார்ச் 16: சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகள் 15.03.2026 முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்,

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படும் வரையில் நடைபெறாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மனுக்கள் பெறும் பெட்டியில் செலுத்திடுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

 

Tags : Mayiladuthurai ,District Collector ,Srikanth ,Mayiladuthurai Collectorate ,Tamil Nadu Assembly Elections 2026… ,
× RELATED திமுக பிரமுகர் மகன் உயிரிழப்பு