மாம்பழம் முடக்கப்பட்டால்: தாமரையில் அன்புமணியை போட்டியிட வைக்க பாஜ ரகசிய திட்டம்; ஹெல்மெட் சின்னத்தில் களமிறங்க ராமதாஸ் முடிவு

பாமக இரண்டாக உடைந்த நிலையில் தந்தை ராமதாசும், மகன் அன்புமணியும் தலைவர் நான் தான் என மோதி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சென்னை சிவில் சிட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறியது. இதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை (திங்கள்) சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் தடையை நீக்குவதுடன் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என தந்தை தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர். அதையும் தாண்டி இழுபறியாக இருக்கும் பட்சத்தில் சுப்ரீம்கோர்ட்டிலும் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்து தயாராக வைத்துள்ளனர்.

இவ்வாறு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் பட்சத்தில் அன்புமணி தரப்பினர் கடும் அதிர்ச்சியடைவார்கள் என தந்தை தரப்பினர் அடித்து சொல்கின்றனர். அன்புமணிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் ஆதரவாக சீராய்வு மனு ஒன்றை தேர்தல் கமிஷன் தாக்கல் செய்தது. அதன்பிறகு சிட்டி சிவில் நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதன்படி நடப்போம் என தெரிவித்து விட்டு ஒதுங்கிக்கொண்டது. மாம்பழத்தை முடக்க வேண்டும் என்பது மட்டும் தான் தந்தை ராமதாசின் முக்கிய திட்டமாக இருக்கிறது.

பாஜ -அதிமுக கூட்டணியில் இருப்பதால் ஒன்று தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும், இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை வரவேண்டும் என பாஜ எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவர்களின் நோக்கமே வடமாவட்டங்களில் கால்ஊன்ற வேண்டும் என்பது தான். பாஜவுக்கு வட மாவட்டங்களில் எந்த ஊரிலும் வலுவான இடம் இல்லை. இவ்வாறு அன்புமணி மூலமாக கால்ஊன்றுவதற்கான ஏற்பாடுகளை கனகச்சிதமாக செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. தாமரை சின்னத்தில் நின்று வெற்றிபெற்றால் கூட, அவர்களால் பாஜவிடம் இருந்து திரும்பி வெளியே வரமுடியாது. அதற்கான வலையை பாஜ வீசியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

இதுகுறித்து ராமதாஸ் தரப்பினர் கூறுகையில், ‘‘அன்புமணியை பொருத்தவரையில் பாமகவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு எந்த வகையிலும் துணையாக இல்லை. ராஜாவீட்டு கன்னுக்குட்டிப் போலவே வந்து பதவிகளை பெற்றுக்கொண்டார். தற்போதும் அவருக்கு பதவி கிடைத்துவிட்டது. இனி பாஜக சொல்வதைத்தான் கேட்பார். ஆனால் நாங்கள் மாம்பழம் சின்னத்தை முடக்கியே ஆக வேண்டும் என்பது தான் எங்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. அவ்வாறு முடக்கப்படும் போது, நாங்கள் ‘‘அய்யா பாமக’’ என்ற பெயரை தயாராக வைத்துள்ளோம். ‘‘ஹெல்மெட்’’ சின்னத்தையும் தயாராக வைத்திருக்கிறோம். எங்கள் பக்கம் உண்மை இருப்பதால் சின்னம் முடக்கப்படுவது உறுதி’ என்றனர். பாஜவின் நோக்கமே வடமாவட்டங்களில் கால்ஊன்ற வேண்டும் என்பது தான். பாஜவுக்கு வட மாவட்டங்களில் எந்த ஊரிலும் வலுவான இடம் இல்லை. இவ்வாறு அன்புமணி மூலமாக கால்ஊன்றுவதற்கான ஏற்பாடுகளை கனகச்சிதமாக செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

* முதல்வராக தொடர உதவியது எனது பெரிய தப்பு அரசியலில் இருந்து எடப்பாடியை மக்கள் துடைத்து எறிவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் திமுக பரப்புரை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கடலாடியில் நடந்த கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அரசியலில் ஒரு மோசடிக்காரர் இருக்கிறார். தன்னைத்தானே பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டவர், 11 தேர்தல் தோல்வியை சந்தித்தவர். அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை. (அப்போது கூட்டத்தினர் எடப்பாடி என கத்தினர்).

அதிமுகவில் 13 ஆண்டுகள் பொருளாளராக பதவி வகித்த நான், ஜெயலலிதா பதவி கொடுக்கும்போது அதிமுக கட்சிக்கு ரூ.2 கோடி கடன் இருந்தது. ஆனால் கட்சியை விட்டு நான் வெளியேற்றப்பட்ட போது ரூ.236 கோடி நிதி வைத்து விட்டு வந்தேன். அதிமுக என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா? நன்றி மறந்தவர் உலகில் இருக்கிறார் என்றால் அது எடப்பாடி தான். அவரை துடைத்து எறியும் சக்தி தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது. தமிழக மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எடப்பாடியின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை நான் காப்பாற்றினேன்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது எனது 5 எம்எல்ஏக்களால் ஆட்சி தப்பித்தது. எனது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தப்பு, எடப்பாடி முதல்வராக தொடர்வதற்கு உதவி செய்தது. அது தமிழ்நாட்டின் கெட்ட காலம். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகினர். துளி கூட தகுதி இல்லாத ஒரே ஒரு துரோகி எடப்பாடியை தமிழக மக்கள் அரசியலிலிருந்து துடைத்து எறிவார்கள். இந்த பகுதியினர் துரோகி எடப்பாடி பழனிசாமி கட்சி வேட்பாளர்களை படுதோல்வி அடைய செய்து, தென்மண்டலத்தில் உள்ள 58 தொகுதியிலும் திமுக அமோக வெற்றி பெற இணைந்து பணியாற்ற வேண்டும். திராவிடமாடல் ஆட்சி தொடர, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் தொடர வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related Stories: