துணை ராணுவ படையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்

 

நாகப்பட்டினம், மார்ச் 14: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் முன்பாகவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் துணை ராணுவபடையினருடன் இணைந்து நாகை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதராண்யம் என 3 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த 3 சட்டசபை தொகுதிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும், அச்சம் இன்றி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு உதவி தளவாயுடன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த துணை ராணுவ படையினரின் 50 பேர் நேற்று முன்தினம்(12ம் தேதி) இரவு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.

Related Stories: