பாஜ பூத் கமிட்டி மாநாடு பந்தல் கால் நடும் விழா

விருதுநகர், பிப்.11: பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி மாநாடு சூலக்கரை மேட்டில் பிப்.15ம் தேதி மாலை 4 மணியளவில் மாநில தலைவர் முருகன் தலைமையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேலானோர் இணைப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதற்கான பந்தல் கால் நடும் விழா மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேல், தொகுதி ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் ஈஸ்வரன், காமாட்சி மற்றும் பென்டகன் பாண்டுரெங்கன், ஜவஹர் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: