கடலுார், மார்ச் 9: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் எஸ்ஐ ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வெள்ளி மோட்டான் தெரு பகுதி அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம், 5 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் லட்சுமணன், சந்தோஷ், எலியஸ், அருண்குமார், காஜா மொய்தீன் ஆகியோர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
