பழுதுபார்க்க செல்லும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் காலாவதி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை'

தஞ்சை, பிப்.11: தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் வித்யா தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகளை விவசாயிகள் வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். மேலும் விதை வாங்கியதற்கான ரசீது மற்றும் கொள்கலன் அட்டை ஆகியவற்றை பயிர் சாகுபடி முடியும் வரை பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.  உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதையின் விவரத்தை விற்பனை ரசீதில் குறிப்பிட்டு விவசாயியின் கையொப்பம் மற்றும் விற்பனையாளர் கையொப்பத்துடன் வழங்க வேண்டும்.

இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் விதை விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரிமம் இன்றி விற்பனை செய்தாலோ, காலாவதியான விதைகளை விற்பனை செய்தாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலோ விதை சட்ட விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வித்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: