பின்னத்தூரில் பள்ளி செல்லா, இடைநின்ற மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பு கணக்கெடுப்பு பணி

திருத்துறைப்பூண்டி, பிப்.11: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, சிஇஓ ராமன், உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழிகாட்டுதல்படி பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி முத்துப்பேட்டை அருகே வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமையில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் இருவர் நாச்சிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவித்திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் முன்னிலையில் 9, 10ம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: