×

வலையபட்டியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

பொன்னமராவதி,மார்ச்9: பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள வலையபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு தாலுகா மருத்துவமனை வளாகத்தில் சிந்தாமணி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.

இதனை முன்னிட்டு கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து நேற்று காலை 10.30மணிக்கு சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

Tags : Vinayagar Temple Kumbabhishekam ceremony ,Valiyapatti ,Ponnamaravathi ,Valiyapatti Government Hospital ,Ponnamaravathi Town Panchayat ,Chintamani Vinayagar Temple Kumbabhishekam ceremony ,Papayi Aachi Government Taluka Hospital ,Pudukkottai ,
× RELATED தலைமை தபால் நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்