செய்துங்கநல்லூரில் போக்குவரத்திற்கு இடையூறாக பேரிகார்டு

 

செய்துங்கநல்லூர், மார்ச் 9: செய்துங்கநல்லூர் வாரச்சந்தை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை – திருச்செந்தூர் சாலையில் செய்துங்கநல்லூர் அமைந்துள்ளது. செய்துங்கநல்லூர் பஜார் முகப்பு பகுதியில் கருங்குளம் யூனியன் அலுவலகம் இயங்குகிறது. இதனருகில் மாவட்ட எல்லை பகுதி சோதனை சாவடி உள்ளது. இதனையொட்டி பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதே சாலையில் செய்துங்கநல்லூர் காவல் நிலையம் அருகே 2வது பேரிகார்டும், 100 அடி தூரத்தில் வாரச்சந்தை கூடும் இடத்தில் மற்றொரு பேரிகார்டும் கடந்த ஓராண்டாக புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அமைந்துள்ள இந்த பேரிகார்டுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே வாரச்சந்தை அருகில் உள்ள பேரிகார்டை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: