எல்.ஐ.சி. ஏஜெண்ட் ரயிலில் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவில், பிப்.10 : நாகர்கோவில் பரமார்த்தலிங்கபுரத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் சட்டை பையில் அடையாள அட்டை, துண்டு சீட்டுகள் இருந்தன. இதை கைப்பற்றி நடந்த விசாரணையில் இறந்து கிடந்தவர், நாகர்கோவில் கே.பி. ரோட்டை சேர்ந்த ஏனோஸ் மில்டன் (80) என்பது தெரிய வந்தது. இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருமே வெளியூரில் உள்ளனர். ஏனோஸ் மில்டன், தனது மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று காலை வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். அவர் வைத்திருந்த துண்டு சீட்டில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை. கடன் பிரச்னை எல்லாம் கிடையாது. நானாக இந்த முடிவை தேடிக்கொள்கிறேன் என எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக குமரி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: