கோவிந்தபேரி மனோ கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டு சிறப்பு கண்காட்சி

வீரவநல்லூர், பிப்.10: கோவிந்தபேரி மனோ கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டு சிறப்பு கண்காட்சி, கருத்தரங்கு நடந்தது. சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தபேரி மனோ கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கு, கண்காட்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கேப்டன் மோனி தலைமை வகித்தார்.  சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப் கண்காட்சி, கருத்தரங்கினை துவக்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் உயர்கல்வி, நுழைவுத்தேர்வுகள் குறித்தும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செய்யதுமுகமது (பொறுப்பு) போட்டித் தேர்வுகள் குறித்தும், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் கணேசன் சுயதொழில், வங்கி கடனுதவி குறித்தும், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் முருகன் முப்படைகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்தும் சிறப்புரையாற்றினார்.

இதில் வணிகவியல் முதுகலை துறைத்தலைவர் தெய்வநாயகம், தமிழ்த்துறை பேராசிரியர் இசக்கியப்பன், உடற்கல்வி இயக்குநர் நிக்சன்கோயில்தாஸ், பேராசிரியர் சுந்தர்ராஜன் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள்

பங்கேற்றனர்.

Related Stories: