சென்னை: விஜய்யின் மனைவி சங்கீதா தொடுத்துள்ள விவாகரத்து வழக்குப் பிரச்னை வொர்த் கிடையாது ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு. மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 10 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய விஜய் சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிரை மையப்படுத்திய முதல்கட்டமாக 12 வாக்குறுதிகளை வெளியிட்டார். அந்த வாக்குறுதிகள்;
* பெண்கள் மற்றும் முதியோருக்கு தனி இலாக்கா உருவாக்கப்படும். அந்த, இலாகா எனது நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கும்.
* 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
* அண்ணன் சீர் திட்டத்தில் நம் தங்கைகளின் திருமணத்திற்காக ஒரு பவுன் தங்கமும், ஒரு பட்டு சேலையும் தாய் வீட்டில் இருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.
* காமராஜர் கல்வி உறுதி திட்டத்தில் இடைநிற்றலே இல்லாமல் செய்வதற்காக ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் ரூபாய் பொருளாதார உதவி தொகையாக வழங்கப்படும்.
* வெற்றிப் பயணம் திட்டத்தில் அரசு போக்குவரத்தில் அனைத்து பேருந்துகளிலும் தமிழகத்தில் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்து பெண்களும் கட்டணம் இல்லை என்று பயணிக்கலாம்.
* ஜீரோ டாலரன்ஸ் கிரைம்ஸ் பெண்களுக்கு எதிரான குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலு நாச்சியார் படை ஏற்படுத்தப்படும். இந்த, திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
* அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களில், பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் பேனிக் பட்டன்ஸ் அறிமுகப்படுத்தப்படும். இந்த, பட்டன்கள் வழியாக 5 நிமிடத்தில் பதிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
* சிசிடிவி, கேமராக்களும், விளக்குகளும், வெளிச்சமும் இல்லாத இடங்கள் இல்லை என்ற வகையில் ஜீரோ டார்க் ஸ்பாட் உருவாக்கப்படும்.
* பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க ‘அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்’ அமைக்கப்படும்.
* பெண்களுக்கு, மிகவும் தேவையான நாட்களில் பொது விநியோகம் நடக்கும் இடங்களான ரேஷன் கடைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா சானிடரி பேட்ஸ் உறுதி செய்யப்படும்.
* நிலுவையில் உள்ள கடன்களை திருப்பி செலுத்துவதன் மூலமும் பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் வரை பட்டியில்லா நிதியை வழங்குவதன் மூலமும் சுய உதவி குழுக்களின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும். சுய உதவி குழுக்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட எம்எஸ் எம்இக்களாக மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் வழங்கப்படும். அதாவது, 100% மானியமாகவே வழங்கப்படும்.
* தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசிர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு பேபி வெல்கம் கிட்டும் வழங்கப்படும். என அறிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், விஜயின் மனைவி சங்கீதா தொடுத்துள்ள விவாகரத்து வழக்கை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி, சமீபமாகச் சில பிரச்சனைகள் ஓடிட்டு இருக்கு இல்லையா?
அதற்கு, நீங்க போராடி ஹர்ட் ஆவதைப் பார்க்கிறேன். அதைப் பார்த்து எனக்கும் ஹர்ட் ஆகுது. அதெல்லாம், நான் பாத்துக்கிறேன். நானும் நீங்களும் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பார்ப்போம் சரியா. அதனால, ஹர்ட் ஆகாதீங்க; அது வொர்த்தெல்லாம் கிடையாது. கான்ஃபிடன்ட்டா இருங்க நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். எனக் கூறினார்.
