தேங்காய் ஊக்குவிப்பு திட்டத்தால் தமிழ்நாட்டில் தென்னை விவசாயிகள் 28 சதவீதம் பயன் பெறுவார்கள்

சென்னை: சென்னை ஐஐடியில் நேற்று மாலை தென்னை விவசாயிகளுடன் ஆலோசனை நடந்தது. இதில், பங்கேற்க டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை கூட்டவும், ‘‘தேங்காய் ஊக்குவிப்புத் திட்டம்” தமிழகத்திற்கு ஒன்றிய பட்ஜெட்டில் புதிய திட்டத்தை அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள தென்னை மர தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலன் பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள 28 சதவீதம், தென்னை மர விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதுகுறித்து தென்னை விவசாயிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: