விஜய் எந்த சர்ச்சையில் சிக்கினாலும், முதல் ஆளாக அவருக்கு முட்டுக்கொடுப்பதை ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என அழைக்கப்படும் தவெக ஆதரவு நெட்டிசன்கள் செய்து வருகின்றனர். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழப்பு, பொதுக்கூட்டங்களில் தொடரும் உயிரிழப்புகள் என விஜய்யால் ஏற்பட்ட மரணங்களுக்கு எல்லாம் அரசியல் சதி என அபாண்டமாக மற்றவர்கள் மீது விர்ச்சுவல் வாரியர்ஸ்கள் பழிபோட்டு வந்தனர். இதனிடையே விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவகாரத்து மனு தாக்கல் செய்ததை, அவர்கள் முதலில் நம்ப மறுத்தனர்.
பிறகு ‘அண்ணனுக்கு ஒன்று என்றால், அண்ணியையும் அடிப்போம்’ என்ற கதையாக சங்கீதாவை இழிவாக பேசி சமூக வலைதளங்களில் விர்ச்சுவல் வாரியர்ஸ் கருத்துகளை வாரியிறைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், நடிகை திரிஷா உடன் ஒரே மாதிரியான உடையணிந்தபடி பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.
விஜய்யின் மனைவி விவாகரத்து மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக குறிப்பிட்டு இருந்த நிலையில், அந்த நடிகை திரிஷா தான் என விஜய் ஒப்புக் கொள்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது விஜய்க்கு ஆதரவாக நின்றவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, தலைகுனிய வைத்துள்ளது.
விஜய் தனது மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும், முறையாக மனைவியை விவாகரத்து செய்யாமல் நடிகையுடன் சுற்றி வருவது தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், ஒரு தலைவருக்கான தகுதி விஜய்யிடம் இல்லை எனவும், தனது குடும்பத்தையே முறையாக பார்த்து கொள்ளாத விஜய் நாட்டிற்கு என்ன செய்வார் எனவும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய்யை கிண்டலடிக்கும் வகையிலான மீம்ஸ்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் விஜய்யை விட்டு கொடுக்கவும் முடியாமல், திரிஷா உடன் ஜோடியாக வந்ததை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் விர்ச்சுவல் வாரியர்ஸ் நொந்து வருகின்றனர். இதேபோல விஜய் ஆதரவு மனநிலையில் இருந்த பலரும், விஜய்க்கு எதிரான கருத்துகளை சொல்லத் துவங்கியுள்ளனர்.
இதனால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி தனக்கு தானே அவப்பெயரை சம்பாதித்து வரும் விஜய்யை நியாயப்படுத்தி கருத்து சொல்ல முடியாமல் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் தவித்து வருகின்றனர். இதேபோல விஜய்க்கு பலமாக பார்க்கப்பட்ட அவரது ரசிகர்களே, அவரது செயல்பாட்டை விமர்சிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். இது விரைவில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என கூறப்படுவதால், தவெக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
