திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பதற்கு தமிழிசை சவுந்திரராஜன் எதிர்ப்பு

சென்னை: திருச்சி ரயில்வே நுழைவாயிலிக்கு கர்த்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டியிருப்பதற்கு தமிழிசை சவுந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தி பெயரை நீக்கி உடனடியாக தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில்; சில அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு, ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் வேண்டும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி ரயில்வே அலுவலகத்திற்கு இந்தி பெயர் வைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனம் வலுக்கிறது.

தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்:
கர்த்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டியிருப்பது புறவாசல் வழியாக இந்தியை திணிக்கும் மற்றொரு முயற்சியாகும். தமிழர்களின் மொழிப்பற்று, உணர்வுகளை புறக்கணித்து இந்தியில் பெயரிடுவது கடும் கண்டத்துக்குரியது. இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் பெயரிட தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: