ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,24,400க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,24,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.2,800 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் கிராமுக்கு ரூ.300 உயர்ந்தது; தற்போது மேலும் ரூ.350 அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மதியம் என ஒரு நாளுக்கு 2 முறை மாறுதல் அடைந்து வருகிறது.

உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக, இதற்கு சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றமே காரணமாக உள்ளது.

அந்த வகையில் சென்னையில், தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,21,600-க்கும், கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.300-க்கும் ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.2,800 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் கிராமுக்கு ரூ.300 உயர்ந்தது, தற்போது மேலும் ரூ.350 அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது.

Related Stories: