ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சாலையில் உள்ள 5 மாடி கட்டிட தனியார் துணிக்கடையில் திடீர் தீ

*கண்ணாடியை உடைத்து உயிர் தப்பிய தொழிலாளர்கள்

திருமலை : ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சாலையில் உள்ள 5 மாடி கட்டிட தனியார் துணிக்கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், கண்ணாடியை உடைத்து தொழிலாளர்கள் உயிர் தப்பித்தனர்.தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் சாலை எண் 36ல் தனியார் ஷாப்பிங் மால் கட்டிடத்தின் மேல் தளத்தில், தொழிலாளர்கள் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது கட்டிடத்தின் வெளிப்புற அழகிற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்ட் ஆப் பேரிஸ் அட்டை மீது வெல்டிங் செய்யும்போது ஏற்படும் தீப்பொறிகள் விழுந்தது.

அதில் பிளாஸ் ஆப் பேரிஸ் அட்டையில் தீ பற்றி ஏறிந்தது. இதனால் ஷாப்பிங் மாலுக்குள் தீ பரவியது. அப்போது, 3வது மாடியில், பெண்களும், 5வது மாடியில் தொழிலாளர்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். தீ பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டனர்.

இதையடுத்து 5வது மாடியில் இருந்த தொழிலாளர் ராஜூ என்பவர் உடனடியாக 5வடு மாடியில் இருந்து 3வது மாடியில் உள்ள தனது மனைவியை காப்பாற்று வதற்காக 3வது மாடிக்கு வந்தார்.

பின்னர், அங்கு முன்பக்கமாக இருந்த கண்ணாடியை உடைத்து அங்கிருந்த தனது மனைவி, பெண்கள் மற்றும் தொழிலாளர்களை ஏணியின் உதவியுடன் துணிக்கடையில் இருந்து பத்திரமாக கிழே அனுப்பி வைத்து, தானும் அங்கிருந்து தப்பித்தார். இதனால், உயிர்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் பீச்சியடித்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய தொழிலாளி ராஜூ கூறுகையில்:- கட்டுமான பணிகளை செய்ய என்னுடன் 3 பேர் வந்தனர். முதலில் மாடியில் புகை வந்தது. கருப்பு புகை காரணமாக எங்கு செல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. பின்னர் 4வது மாடிக்கு சென்றபோது, ​​மேலும் கருப்பு புகை இருந்தது. எல்லா இடங்களிலும் கரும் புகை சூழ்ந்திருந்தது.

மேலும், வெல்டிங் பணியில் இருந்த 4 ஊழியர்கள் பக்கவாட்டு கட்டிடத்தின் மீது குதித்து தீயில் இருந்து தப்பிவிட்டனர். எங்களுடன் வந்த மற்ற 3 பேரும், நானும் கண்ணாடி கதவை உடைத்து ஏணி மூலம் கீழே இறங்கினோம். நாங்கள் இறந்துவிடுவோம் என்று நினைத்தோம், ஆனால் கடவுள் அருளால் எப்படியோ உயிர் தப்பினோம் என்றார்.

Related Stories: