முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு அசாம் முதல்வருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

கவுஹாத்தி: அசாம் முதல்வரும் பாஜ மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்களை மியா என்று கூறி தொடர்ந்து மத ரீதியாக கருத்துகளை கூறி விமர்சித்து வந்தார். இதையடுத்து அசாம் மாநில எழுத்தாளர் ஹிரேன் கோகைன், முன்னாள் டிஜிபி ஹரேகிருஷ்ண தேகா, பத்திரிகையாளர் பாரேஷ் மாலேக்கார் உள்ளிட்டோர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அசுதோஷ் குமார், நீதிபதி அருண் தேவ் சவுத்ரி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அசாம் முதல்வர் ஹிமந்தா மற்றும் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related Stories: