கொராடாச்சேரி பகுதியில் 3 சிறுமிகள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்

திருவாரூர், பிப். 27: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் உதயகுமார்(20). கூலி தொழிலாளியான இவர் 14 வயது, 9 வயது மற்றும் 5 வயது ஆகிய மூன்று சிறுமிகள் குளிப்பதற்காக குளியலறைக்கு செல்வதை நோட்டமிட்டு பார்த்துள்ளார். அதன் பின்னர் குளியலறையில் குளிப்பதை ரகசியமாக தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனை கண்ட சிறுமிகள் தங்கள் தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிறுமிகளின் தாய், திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Related Stories: