×

சவுதி புரோ லீக் கால்பந்து ரொனால்டோ அணி ரொமான்டிக் வெற்றி

ஜெட்டா: சவுதி புரோ லீக் கால்பந்து போட்டியில் நேற்று, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அல் நஜ்மா அணியை வீழ்த்தி அசத்தியது. சவுதி புரோ லீக் கால்பந்து போட்டிகள் சவுதி அரேபியாவில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டி ஒன்றில் போர்ச்சுகலை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணியும் அல் நஜ்மா அணியும் மோதின. துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நஸர் அணி வீரர்கள் பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

போட்டியின் 7வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ரொனால்டோ, அணியின் முதல் கோல் போட்டு அசத்தினார். அவரைத் தொடர்ந்து அல் நஸர் அணியின் கிங்ஸ்லி கோமன் 31, இனிகோ மார்டினஸ் 42 மற்றும் 80, சாடியோ மனே 52வது நிமிடங்களில் கோல்கள் போட்டனர். மாறாக, அல் நஜ்மா அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 5-0 என்ற கோல் கணக்கில் அல் நஸர் அணி அபார வெற்றி பெற்றது.

Tags : Saudi Pro League ,Football ,Ronaldo ,Jeddah ,Cristiano Ronaldo ,Al Nasr ,Al Najma ,Saudi Arabia… ,
× RELATED டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று:...