×

ஸ்ரீகாந்த் கலக்கல் வெற்றி

முலெம் ஆந்தெர்ரூர்: ஜெர்மன் ஓபன் பேட்மின்டன் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி அபாரமாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மன் ஓபன் பேட்மின்டன் போட்டிகள் முலெம் ஆந்தெர்ரூர் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, போலந்து வீரர் மிகோலஜ் ஸிமனோவ்ஸ்கி மோதினர். போட்டியின் துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய கிடாம்பி, 21-12, 21-11 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி வாகை சூடினார்.

இதன் மூலம் 2வது சுற்றுக்கு அவர் முன்னேறினார். மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப், தைவான் வீராங்கனை ஹுவாங் யுசன் உடன் மோதினார். முதல் செட்டில் அமர்க்களமாக ஆடிய யுசன், 21-13 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். 2வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக மோதி புள்ளிகளை பெற்றபோதும், கடைசியில் அந்த செட்டையும் 21-17 என்ற புள்ளிக் கணக்கில் யுசன் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

 

Tags : Srikanth ,Mullem Anderruhr ,Srikanth Kidambi ,German Open badminton ,German Open ,Mullem ,Anderruhr ,
× RELATED டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று:...