ரூ.5000 கொடுத்து முதல்வர் புண்ணியம்: திருவாவடுதுறை ஆதீனம் பாராட்டு

திருவிடைமருதூரில் மகாலிங்கசுவாமி கோயில் தேரோடும் வீதியில் மின் புதைவடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதாவது: இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக விளங்குகின்ற மு.க.ஸ்டாலின் நல்ல ஆட்சியின் கீழ் புதைவடம் அமைப்பதற்கான திட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழக முதலமைச்சர் இலவசங்களை வாரி வாரி வழங்கி கொண்டிருக்கின்றார். இலவசம் என்பதும் ஒரு தர்ம காரியம்தான். தர்மத்தை செய்வது புண்ணியம். புண்ணியம் செய்தால் வாழ்க்கையில் நன்மை கிடைக்கும். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு கிடைக்கும். பாவம் செய்தாலும் சரி, புண்ணியம் செய்தாலும் சரி, இரண்டுமே நமக்குத்தான் கிடைக்கும். அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5,000 வழங்கி புண்ணியம் செய்துள்ளார். தமிழக அரசு கோயில்களில் அன்னதான திட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: