சென்னை: அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் சென்னைக்கு திடீரென்று வந்துள்ளார். தேர்தல் நேரத்தில் அவரது வருகை பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் பண நடமாட்டத்தை தடுக்கும் வகையில் தீவிரமாக வெளிமாநில போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன், சென்னைக்கு மூன்று நாள் பயணமாக நேற்று வந்துள்ளார். தமிழகத்தில் நிலுவையில் உள்ள பிஎம்எல்ஏ மற்றும் பெமா வழக்குகளை இயக்குநர் நவீன், இன்று மறு ஆய்வு செய்கிறார். மேலும் 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட கருப்புப் பணம் தொடர்பான எஸ்ஐடி கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தேர்தல் நேரத்தில் அவர் 3 நாள் பயணமாக சென்னை வந்திருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில் அமலாக்கத்துறை இயக்குநர் சென்னையில் 3 நாள் முகாம்: வழக்குகளை தீவிரப்படுத்துகிறார்
- அமலாக்க இயக்குநரகம்
- சென்னை
- ராகுல் நவீன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைமை தேர்தல் ஆணையர்
- ஞானேஷ்வர் குமார்
