வள்ளியூர் அரசு மருத்துவமனையில் காசநோயை கண்டறியும் நவீன மருத்துவகருவி சேவை

பணகுடி, பிப். 9:  வள்ளியூர் அரசு மருத்துவமனையில் காச நோய் கண்டறியும் நவீன மருத்துவ கருவியின் சேவையை இன்பதுரை எம்எல்ஏ துவக்கிவைத்தார்.  நெல்லை அரசு  மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து வள்ளியூர் அரசு மருத்துவமனையில்  காச நோயை கண்டறியும்  நவீன மருத்துவக் கருவியின் சேவை துவக்க விழா நடந்தது. தலைமை வகித்த இன்பதுரை எம்எல்ஏ, இதன் சேவையைத் துவக்கிவைத்துப் பார்வையிட்டார். ரூ.11 லட்சம் மதிப்பிலான இக்கருவி மூலம் நோயாளியை பரிசோதித்து 2 மணி நேரத்தில் அவருக்கு காசநோய் இருக்கிறதா இல்லையா என்பதை  கண்டுபிடித்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மூலிகை செடிகள், மரக்கன்றுளை நட்டிய இன்பதுரை எம்எல்ஏ, பிரசவ வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பெற்றெடுத்த கேசவநேரியைச் சேர்ந்த பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு பெட்டகம் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் காசநோய் தடுப்பு சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் டாக்டர் வெள்ளச்சாமி, அதிமுக வள்ளியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், நான்குநேரி ராதாபுரம் தாலுகாக்கள் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தலைவர் முருகேசன், அரசு வக்கீல் கல்யாணகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் அருண்குமார், தலைமை மருத்துவர் கவிதா, வள்ளியூர் நகரச் செயலாளர் பொன்னரசு, பொதுக்குழு உறுப்பினர்  செழியன், நகரத் துணைச்செயலாளர் கல்யாணசுந்தரம், நிர்வாகிகள் எட்வர்ட் சிங், ராஜா ராம்மோகன், முத்துராஜ், கருப்பசாமி, சங்கரன், முத்துலிங்கம், பொன் பாண்டி, சுடலைக்கண்ணு, முத்துகிருஷ்ணன், வெள்ளத்துரை, சுரேஷ், சக்தி, ஹரிகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: