ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கு இலங்கை முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி தேவாலயங்கள் மற்றும நட்சத்திர ஓட்டல்களை இலக்கு வைத்து தொடர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 270 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சாலி குற்றப்புலனாய்வுத் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது சுரேஷ் தூதரக பணியில் இருந்தார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான இவர் 2015ம் ஆண்டுக்கு முன்பு ராஜபக்சே அரசில் மாநில புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: