ஜெருசலேம்: இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். டெல் அவிவின் புறநகரில் உள்ள பென்குரியன் சர்வதேச விமானத்திற்கு மாலை 4 மணி அளவில் அளவில் சென்றடைந்த பிரதமர் மோடி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நெதன்யாகு அவரது மனைவி சாரா இருவரும் விமான நிலையத்திற்கு நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
விமானத்தில் இருந்து பிரதமர் மோடி இறங்கி வந்ததும் நெதன்யாகு ஆரத்தழுவி வரவேற்றார். இரு தலைவர்களும் காரில் ஏறி ஜெருசலேம் புறப்பட்டுச் சென்றனர். அங்கு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். இரவு டெல் அவிவில் தங்கிய பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக்கை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து, பிரதமர்கள் மோடி – நெதன்யாகு இடையேயான சந்திப்பு நடக்கிறது. இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவு பலமடைந்துள்ளது. கடந்த 2017ல் முதல் இந்திய பிரதமராக மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார். இது இருதரப்பு உறவில் திருப்பு முனையாக அமைந்தது. தற்போது 2வது முறையாக பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். சுதர்சன் சக்ரா என்று அழைக்கப்படும் உள்நாட்டு வான் பாதுகாப்பு கேடயத்தை உருவாக்க இந்தியா முயற்சித்து வருவதால், இஸ்ரேலின் சிறப்புமிக்க ஐயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பின் சில உபகரணங்களை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி-நெதன்யாகு இன்று சந்தித்து பல முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளனர்.
