×

முள்ளக்காட்டில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடையை மீண்டும் அமைக்க கோரிக்கை

ஸ்பிக்நகர், பிப். 26: முள்ளக்காடு பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடையை மீண்டும் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது முள்ளக்காடு. இக்கிராமத்தில் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி, வேலை மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தூத்துக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வந்தனர். சாலை விரிவாக்கத்திற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது.

ஆனால் அதன் பிறகு இப்பகுதியில் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் கடும் வெயில் மற்றும் மழையில் ஒதுங்க இடமின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே கிராம மக்கள் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Mullakadu ,Spiknagar ,Thoothukudi-Thiruchendur road ,
× RELATED காரியாபட்டியில் திறப்பு ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்