கிருஷ்ணகிரி, பிப்.26: காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில், கடந்த 16ம் தேதி அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோயில் மயான சூறை விழா நடந்தது. அப்போது, இளைஞர்கள் சிலர் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தனர். அப்போது அங்கு வந்த காவேரிப்பட்டணம் அப்பாசாமி நாயுடு தெருவைச் சேர்ந்த ஆகாஷ்(28) மற்றும் சிலர் அவர்களை டி-சர்ட்டை கழற்றுமாறு கூறியுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஆகாஷ் தரப்பினர், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சாந்தபுரத்தை சேர்ந்த பிரசாந்த் உள்பட 6 பேரை அரிவாளால் வெட்டினர். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ், காவேரிப்பட்டணம் மில்மேட்டை சேர்ந்த சாண்டி(எ) சந்தோஷ் உள்பட 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான ஆகாஷ், சந்தோஷ் ஆகிய 2 பேரையும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி., தங்கதுரை, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில், இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
6 பேரை அரிவாளால் வெட்டிய இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
- கிருஷ்ணகிரி
- அங்காளமான்
- பூங்காவனத்மன்
- பன்னீர்செல்வம் தெரு
- Kaveripatnam
- வீரப்பன்
- அப்பாசாமி நாயுடு தெரு
- காவேரிப்பட்டணம்…
