×

நலம் யோகம்!

நன்றி குங்குமம் தோழி

உடலுக்கு ஒளி… மனதுக்கு அமைதி!

மலச்சிக்கல்=மனச்சிக்கல்!

குடலும் மூளையும் நரம்புகள் மற்றும் ஹார்மோன்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள அமைப்பே Gut-Brain Axis. குடலில் சீர்கேடு ஏற்பட்டால் மன அழுத்தம், பதட்டம், சோர்வு, கவனக்குறைவு தோன்றலாம். அதனால் சுத்தமான குடல் என்பது, நல்ல ஜீரணம், நோய் எதிர்ப்பு சக்தி, மன அமைதிக்கு மிக முக்கியம்.யோக ஆசனங்கள், குடல் உறுப்புகளுக்கு மசாஜ் அளித்து அபான வாயுவை தூண்டுகின்றன. மலாசனம், உதரகர்ஷணாசனம், பவன்முக்தாசனம் போன்றவை கழிவு நீக்கத்தை சீராக்கி உடல்-மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

மலாசனம்

இதனை ஆங்கிலத்தில் Deep Yogik Squat என அழைப்பர்.மலம் என்றால் கழிவு பொருள். பெயருக்கு ஏற்ப உடல் கழிவை வெளியேற்றும் சிறந்த ஆசனம் இது. அதாவது, குத்து நிலையில் அமரும் ஆசனம். குத்த வைத்து உட்காருதல் அல்லது குதிங்கால்களில் அமர்ந்து உட்காருதல்.

பயிற்சி முறை

படத்தில் காட்டியிருப்பது போல் இரண்டு முழங்கைகளையும் வைத்து தொடைப் பகுதியை நன்றாக விலக்கி வைக்க வேண்டும். இப்போது மார்பு பகுதிக்கு நேராக இரண்டு கைகளையும் சேர்த்து வணக்கம் சொல்வதைப்போல் வைக்க வேண்டும்.முழுமையாக குத்த வைத்து உட்கார இயலாதவர்கள் ஒரு யோகா நிபுணரின் ஆலோசனையுடன் ப்ராப்ஸ் உபயோகித்து இந்தப்பயிற்சியை செய்யலாம்.

பலன்கள்

*மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது.
*அபான வாயுவைத் தூண்டி கழிவுகள் வெளியேற செய்யும்.
*வயிற்றுப் பகுதியின் ராஜ உறுப்புகளுக்கு மென்மையான அழுத்தம் (Massage) கிடைக்கும்.
*முழுங்கால் மூட்டின் இயக்கத் திறனை அதிகமாக்கும்.
*கணுக்கால்களைத் தாங்கும் தசைகள் வலுவாகும்.
*மூட்டுகளில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முழுங்கால் மூட்டுவலி, குதிங்கால் வலி, தேய்மானம் பிரச்னைகள் சரியாகும்.

சிம்மாசனம்

ஆங்கிலத்தில் இதனை Lion Phose என்று அழைப்பர்.உடலின் அனைத்து பிரச்னைகளுக்குமே ஒரு காயகல்பமாக இந்த சிம்மாசனம் திகழ்கிறது. கோயில் சிற்பங்களில் சிங்கம் அல்லது யாளி அமர்ந்திருப்பதை போன்று இந்த ஆசன நிலை இருக்கும். இதிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. படத்தில் நான் காட்டியிருப்பது மிக எளிமையான ஒரு நிலை.

பயிற்சி முறை: மலாசன அல்லது குதிங்கால்களில் அமரும் ஆசனத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் பாதங்களின் வளைவுக்குள் நுழைத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது தரையில் பதித்து வைத்துக் கொள்ளலாம்.

இப்போது கருவிழி இரண்டும் புருவ மத்தியில் பார்த்த நிலையில் இருக்க வேண்டும். வெளி மூச்சை எடுக்கும் பொழுது நாக்கை நன்றாக நீளமாக வெளியே நீட்டவேண்டும். மூன்றிலிருந்து ஐந்து மூச்சு கால அளவுக்கு இந்தப் பயிற்சியை செய்யலாம்.வெளிமூச்சு எடுக்கும்பொழுது நாக்கை நன்றாக வெளியே நீட்டி, சிங்கம் கர்ஜிப்பதை போன்ற ஒலியை அடி வயிற்றிலிருந்து எழுப்பி இந்த ஆசனத்தை செய்யலாம். இதனாலே சிம்ம கர்ஜன ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது.மாதவிடாய் நேரத்தில் பெண்கள் இந்த ஆசனத்தை கண்டிப்பாக செய்யக் கூடாது.

பலன்கள்

*நாளமில்லா சுரப்பிகளை ஊக்கப்படுத்துகிறது.

*சக்கரங்களை சமன்படுத்துகிறது.

*பெண்களின் பெரிமெனோபாஸ் கால ஹார்மோன் இன்பேலன்ஸை சீராக்கும்.

*மாதவிடாய் நாட்கள் வலியின்றி எளிதானதை உணர முடியும்.

*கர்ப்பப்பை பலமடையும்.

*குழந்தை பேருக்கு பிறகான டையாஸ்டாசிஸ் ரெக்ட்டை(diastasis recti) பிரச்னை குறையும்.

*எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) பிரச்னைக்கு பலன் உண்டு.

*தைராய்டு இம்பேலன்ஸ், திக்கு வாய் பிரச்னைகள் குறையும்.

*கருவிழிகளை புருவத்தின் மத்தியில் வைப்பதால், ஆகிளை சக்கரம் தூண்டப்பட்டு, பிட்யூட்டரி சுரப்பி சிறப்பாக செயல்படும்.

வாயு நிஷ்காசனம்

மலாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். பாதங்கள், குதிங்கால் முழுமையாக தரையில் பதிய வேண்டும். முதுகுத் தண்டு நேராக இருக்க வேண்டும்.இப்போது கைகள் இரண்டையும் முழுங்கால்களுக்கு மேல் வைத்து, உள் மூச்சை எடுக்கும் பொழுது தோள்களை மேல்பக்கமாக நீட்டி முதுகுத் தண்டை நன்றாக நீட்டிக்க வேண்டும். வெளி மூச்சு விடும் பொழுது உடலை வலது பக்கம் திருப்பி இடது முழுங்காலை வலது பாதத்தின் பக்கம் அழுத்த வேண்டும்.உள் மூச்சை எடுக்கும் பொழுது மீண்டும் முதுகுத் தண்டு நேராக வரவேண்டும். இதையே இடது புறமும் செய்ய வேண்டும். இரண்டு பக்கங்களிலும் ஐந்து முதல் பத்து முறை செய்து பழகலாம்.

பலன்கள்

*மலச்சிக்கல், வாயு பிரச்னையை குறைக்கும்

*ஜீரணத்தை மேம்படுத்தும்.

*இடுப்பு, முதுகு, முழுங்கால் மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும்.

*அபான வாயுவை தூண்டி கழிவு நீக்கத்தை மேம்படுத்தும்.

பலன்கள்

*வயிற்றில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றும்.

*வயிறு வீக்கம், அஜீரணப் பிரச்னைகள் குறையும்.

*குடல் இயக்கத்தை தூண்டி மலச்சிக்கலை தணிக்கும்.

*கீழ் முதுகு தசை இறுக்கத்தை குறைத்து உடலை லேசாக்கும்.

தொகுப்பு: ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED அழகே உன்னை ஆராதிக்கிறேன்!