×

இயற்கை வைத்தியம்!

நன்றி குங்குமம் தோழி

*மூளை செயல் திறன் அதிகரிக்க கறிவேப்பிலை துவையலை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.

*மருதாணியை அரைத்து வருடம் 2 தடவையாவது கைகளில் வைத்துக் கொண்டால் மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.

*வல்லாரை இலையை நெய்யில் வதக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட நியாபக சக்தி அதிகரிக்கும்.

*கண் பார்வைக்கு பாலில் குங்குமப்பூ சேர்த்து குடிக்கலாம். அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சமையலில் சேர்க்கலாம். தினம் 5 பாதாம் சாப்பிடலாம்.

*செவ்வாழை பழம் இரவில் சேர்த்துக் கொள்வதால் பல் சொத்தை, ரத்தக்கசிவு நீங்கும்.

*நரம்புகள் பலம் பெற வாரம் 3 நாட்கள் 2 அத்திப்பழம் சாப்பிடவும்.

*ரத்த ஆரோக்கியத்துக்கு பீட்ரூட் ஜூஸை வாரம் 2 முறை குடிக்கலாம். தினம் ஒரு கப் தயிரை சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் அடைப்பு ஏற்படாது.

*விளாம்பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கும்.

*முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவ முகச்சுருக்கம் நீங்கும். சந்தனக்கட்டையை இழைத்து எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவினால் பருக்கள் நீங்கும்.

*முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயம் 2 ஸ்பூனை காலையில் எழுந்ததும் சாப்பிட்டு சிறிதளவு மோர் குடித்தால் வயிறு சுத்தமாகும்.

*சமையலில் அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சேர்க்கவும். மாதுளம் பழச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து 3 வேளை குடித்தால் மலக்குடல் பிரச்னை இன்றி இருக்கும்.

தொகுப்பு: எஸ்.பார்வதி கோவிந்தராஜ், நாகப்பட்டினம்

Tags : Kumkum ,
× RELATED அழகே உன்னை ஆராதிக்கிறேன்!