×

மென்மையான பாதம் பெற…

நன்றி குங்குமம் தோழி

பெரும்பாலான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்தவெடிப்புதான். இதை பேக்க சில எளிய வழிகள்…

*பப்பாளி பழத்தை நன்கு நைஸாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் கழுவினால் பித்த வெடிப்பு குணமாகும்.

*மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்புள்ள இடங்களில் தடவி வர நாளடைவில் பித்தவெடிப்பு குணமாகும்.

*வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து, சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்தக் கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்புள்ள இடங்களில் பூசினால் பித்த வெடிப்பு நீங்கும்.

*விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து, அதில் மஞ்சள் தூளைக் கலந்து, பேஸ்ட் போல குழைத்து, பாதத்தில் வெடிப்புள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

*தண்ணீரை சூடு படுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின் ஸ்கிரப்பர் கொண்ட பாதத்தினை தேய்த்துக் கழுவினால் கெட்ட செல்கள் உதிர்ந்து பித்த வெடிப்பு குணமாகும்.

*இரவு நேரத்தில் தூங்கப் போவதற்கு முன் காலை நன்றாக தேய்த்துக் கழுவி, சிறிது தேங்காய் எண்ணெயை தடவினாலும் பித்தவெடிப்பு வராமல் தடுக்கலாம்.

தொகுப்பு: ச.லெட்சுமி, தென்காசி.

Tags :
× RELATED பாமாயில்… புற்றுநோய் அச்சம் தேவையில்லை!