நன்றி குங்குமம் தோழி
*பெண்களுக்கு பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது.
*மாதவிடாய் சரியாக வராதவர்களுக்கு பெருங்காயம் அதனை சீர்படுத்தும்.
*சினைப்பை நீர்கட்டி உள்ள பெண்கள் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொள்வது நல்லது.
*மாதவிடாய் சீராக பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து 2 மிளகளவு உருட்டி சாப்பிடலாம்.
*குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம் ‘லோசியா’ (Lochia) முழுமையாய் வெளியேறப் பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனைவெல்லம் சேர்த்து பிரசவித்த 5 நாட்கள் காலையில் கொடுப்பது நல்லது.
*அஜீரணத்துக்கு பெருங்காயம் மிக முக்கியமான மருந்து. வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும் போது, துளி பெருங்காயம் அந்த உணவில் போட மறக்கக் கூடாது.
*சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவை தலா 10 கிராம் எடுத்து பெருங்காயம் 2½ கிராம் (பிற பொருட்களில் ¼ பங்கு மட்டும்) எடுத்துப் பொடித்து வைத்து சோற்றில் போட்டுப் பிசைந்து முதல் உருண்டையை சாப்பிட்டு பின் சாப்பாடு சாப்பிட்டால் அஜீரணம், குடல் புண், வாயு முதலான நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.
*நெஞ்சு எலும்பின் மையப்பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயுவலி ஏற்பட்டால் பெருங்காயம் 1 பங்கு, உப்பு 2 பங்கு, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக் கொண்டு காலையும், மாலையும் 7 நாட்கள் சாப்பிட வாயுதொல்லை முழுமையாக நீங்கும்.
*குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓமநீரில் துளி பெருங்காயப் பொடி கலந்து கொடுக்க பசியை கொடுக்கும்.
தொகுப்பு: பி.தீபா, கிருஷ்ணகிரி.
