தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட உள்ளார். எஸ்.ஐ.ஆர் பணியை தொடர்ந்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதால் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடியாக குறைந்தது.
