மணிப்பூரில் 2023ல் நடந்த வன்முறை சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாஜக எம்.எல்.ஏ வுங்சாகின் வால்டே(61)உயிரிழந்துள்ளார். 2023ல் இம்பாலில் கும்பல் தாக்குதலில் காயம் அடைந்த வால்டே 2 ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். குருகிராமில் உள்ள மருத்துவமனையில் வால்டே நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.
