- பாஜக சிறுபான்மை அணி மாநாடு
- நெல்லை
- நயினார் நாகேந்திரன்
- Tamilisai
- பாரதிய ஜனதா கட்சி
- சிறுபான்மை
- அணி
- உடையார்பட்டி
- தாமிராபராணி நதி
- சிறுபான்மை குழு
- மாநில தலைவர்
- கோயம்புத்தூர் ஜான்சன் ஜோசப்
- துணை ஜனாதிபதி
- அப்துல் கரீ
நெல்லை: பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையின அணியின் மாநில மாநாடு நெல்லையில் நேற்று மாலை நடந்தது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உடையார்பட்டி பகுதியில் நடந்த இம்மாநாட்டிற்கு சிறுபான்மையின அணியின் மாநில தலைவர் கோவை ஜான்சன் ஜோசப் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அப்துல் கரீம், செயலாளர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பாஜவின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், நெல்லை மாவட்டத் தலைவர் முத்துபலவேசம், மாநில பொதுச் செயலாளர் நெப்போலியன் சேவியர் ஜான் பீட்டர், மாநில துணைத்தலைவர் வக்கீல் பால் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். இதனிடையே மாநில அளவிலான இம்மாநாட்டில் கட்சியின் மாநில தலைவரும் நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவி தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இவர்களை வரவேற்று நெல்லை மாநகரின் பல்வேறு இடங்களில் பேனர்களும் நிறுவப்பட்டிருந்தன. ஆனால், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் இம்மாநாட்டை பங்கேற்காமல் புறக்கணித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சிறுபான்மையினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
