×

மேட்டூர் அணை நீர்மட்டம் 89 அடியானது

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1000 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 61 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 73 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 2,500 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 89.25 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 89.05 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 51.57 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur ,Okenakkal Cauvery ,Mettur dam ,
× RELATED ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு...