- குமாரி ஆனந்தன்
- Tamilisai
- காசி முத்து மானிக்கம்
- சென்னை
- திமுக
- எடப்பாடி
- விஜயகாந்த்
- பிரேமலதா
- கலைஞர்
- கலைஞர் கட்சி
சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததற்காக விஜயகாந்த் ஆத்மா, பிரேமலதாவை மன்னிக்காது என தமிழிசையும், எடப்பாடியும் கதறுகின்றனர். தனது திருமணத்தை கலைஞர் தலைமையில் நடத்தி மகிழ்ந்த கேப்டனின் ஆத்மா, கலைஞர் கட்சியுடன், தனது மனைவி சேர்ந்ததற்காக மகிழுமே தவிர, வருந்தாது. கலைஞருக்கு தங்க பேனா வழங்கிய கேப்டன் ஆத்மா, கலைஞருடன் ஏற்பட்ட கூட்டணிக்காக மகிழுமே தவிர வருந்தாது.
திமுக கூட்டணிக்கு லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்திருக்கு பிரேமலதாவின் முடிவு கேட்டு தமிழகமே மகிழ்கிறது. தமிழிசையும், எடப்பாடியும் அழத்தானே செய்வர். இலக்கிய செல்வர் குமரி அனந்தன், தன் வாழ்நாள் எல்லாம் காவிக் கூட்டத்தை எதிர்த்தார். அந்த காவிக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்த குமரியார் பெற்ற குமாரி தமிழிசையின் பாஜ செயலை குமரியார் ஆத்மா மன்னிக்குமா?
இனி எந்த காலத்திலும் பாஜவுடன் எனது அதிமுக ஒட்டோ, உறவோ கொள்ளாது என்று உறுதி தருகிறேன் என்று சொன்னாரே ஜெயலலிதா, அந்த ஜெயலலிதாவின் ஆத்மா பாஜவுடன் கூட்டு சேர்ந்த எடப்பாடியை, தினகரனை மன்னிக்குமா?. தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த பாஜவோடு, தமாகா என்ற பெயரில் கூட்டணிக்கு கொண்டுபோய் சேர்த்த வாசனை மூப்பனார் ஆத்மா மன்னிக்குமா? தான் படுத்திருந்தபோது, தன் தலையணைக்கு நெருப்பு வைத்து, தன்னை உயிரோடு அழிக்க முயன்ற பழைய ஆர்.எஸ்.எஸ்.சுடன் உறவு கொள்வதை காமராஜரின் ஆத்மா மன்னிக்குமா?
எடப்பாடிக்கு நிர்வாகம்னா தெரியுமா? டயர் நக்கிறதைவிட என்ன தெரியும் என்று கேட்டுவிட்டு, தந்தைக்கு துரோகம் செய்யும் அரசியல் கவுண்டமணிகள் வாழும் நாட்டில் ஆத்மாவை பற்றி பேசுகிறீர்களே. தான் சாகின்றபோது ஜெயலலிதாவுடன் எந்த உறவும், யாரும் வைக்கக்கூடாது என கூறி ஜெயலலிதாவின் தொலைபேசி இணைப்பை கூட துண்டித்த எம்.ஜி.ஆருக்கு துரோகமான ஜெயலலிதாவை இன்றும் சிலர் ஆதரிக்கின்றனரே, அந்த கூட்டத்தை எம்.ஜி.ஆரின் ஆத்மா மன்னிக்குமா?.
2014ல் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்த தேமுதிகவின் உதவியால் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்னனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கியது பாஜ. ஆனால் ஒருவருக்கு இருவராக தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணனையும், அன்புமணியையும் வெற்றி பெற வைத்த தேமுதிகவுக்கு ஆறுதலாக என்ன வெளிச்சம் தந்தது பா.ஜ. வைஜெயந்தி மாலா, சோ போன்றோர் நியமன எம்.பி. ஆனபோது. பாஜ கேப்டனுக்கு எம்.பி. தந்ததா?
அல்லது முருகனை, ஜெய்சங்கரை, நிர்மலா சீதாராமனை மாற்று மாநிலத்தில் தேர்ந்தெடுத்திருந்தது போல, விஜயகாந்தை தேர்ந்தெடுக்க வைத்தீர்களா? நடிகர் சத்ருகன்சின்கா கோபி கிருஷ்ணா அமைச்சராகலாம், கேப்டன் ஆகக்கூடாதா?. கேப்டன் மரணம் அடைந்தபோது, அரசு மரியாதை தந்ததுடன், வீடு, அலுவலகம், அரசினர் தோட்டம் என மூன்று இடங்களிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர் தளபதி, குறைந்த பட்சம் பாரத ரத்னாவாவது கேப்டனுக்கு ஒன்றிய அரசு கொடுத்ததா என்றால் இல்லை. கடலில் முத்து சேருவதும், வானில் நிலவு தோன்றுவதும் அதிசயம் அல்ல, வெல்லப்போவது முதல்வர் மு.க.ஸ்டாலினை தவிர வேறு எவருமில்லை இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
