பாஜக ஆளும் மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உதவித் தொகை பயனாளிகள் குறைப்பு

மும்பை : பாஜக ஆளும் மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உதவித் தொகை பயனாளிகள் குறைக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் மாதம் ரூ.1,500 உதவித் தொகை பெறும் பெண்களின் எண்ணிக்கை சட்டமன்ற தேர்தலுக்கு பின் கணிசமாக குறைக்கப்பட்டது. 2024ல் மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 2.4 கோடி பயனாளிகளுக்கு மகளிர் உதவித் தொகை வழங்கப்பட்டது. 2025 டிசம்பரில் 1.57 கோடியாக மகளிர் உதவி தொகை பெறுவோர் எண்ணிக்கையை பாஜக அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 90 லட்சம் பெண்கள் உதவித் தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது.

மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து 2025ல் e-KYC குளறுபடியால் 24 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டனர்.  e-KYC குளறுபடியால் பெரிய அளவில் பெண்கள் நீக்கப்பட்டதால் சரிபார்ப்பு பணிக்கு மார்ச் 31 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. ஜூலை 2025ல் தீவிர சரிபார்ப்பு பணிக்கு பின்பு மேலும் 26.34 லட்சம் பெண்கள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு தேர்தலுக்குப் பின் பயனாளிகள் எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்பட்டதாக மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மற்ற திட்ட நிதிகளை மாற்றி தேர்தலுக்காக மகளிர் உதவித் தொகை திட்டத்துக்கு தரப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு முன்பு, மகளிர் உதவித் தொகை திட்டத்தில் மராட்டியத்தில் 14,000 ஆண்களுக்கு ரூ.4,800 கோடி முறைகேடாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: