கோடைகால விடுமுறை பயணத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

மதுரை: பள்ளி, கல்லூரிகள் கோடை விடுமுறையையொட்டி வெளியூர் செல்ல வசதியாக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. கோடைகால விடுமுறையை ஒட்டி பொதுமக்கள் வெளியூர் செல்ல திட்டமிடுவது வழக்கம். இவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ், ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில், வழக்கமான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரலில் தொடங்கி மே வரை விடுமுறை நாட்களாக இருக்கும். இது பள்ளி, கல்லூரிகளுக்கு மாறுபடும். குறிப்பாக 12ம் வகுப்பிற்கு முன்கூட்டியே தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை வந்துவிடும். அதன்பிறகு 11, 10ம் வகுப்பிற்கு தேர்வுகள் நடத்தப்படும். பின்னர், உயர்நிலை, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். எனவே, ஏப்ரல் 2வது வாரத்தில் இருந்தே விடுமுறை தொடங்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் நடப்பாண்டு கோடை விடுமுறை விரைவில் வந்து விடும். எனவே, வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடுவோர், தற்போதே திட்டமிட்டு உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.

ரயில் டிக்கெட் முன்பதிவு….
எந்த ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்தால் தான், அதற்கேற்ப ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். கடைசி நேரத்தில் டிக்கெட்கள் கிடைக்காது. நெருக்கடியை சந்திக்க நேரிடும். குறிப்பாக ரயில்களை எடுத்துக் கொண்டால் முன்பு 4 மாதங்களுக்கு முன்கூட்டியே டிக்கெட்கள் முன்பதிவு செய்யும் முறை அமலில் இருந்தது. தற்போது நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதங்கள், அதாவது 60 நாட்களுக்கு முன்பாக தான் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். அப்படிப் பார்த்தால் வரும் ஏப்ரல் மாதத்திற்கு தற்போதே டிக்கெட்கள் ஓப்பனாகி விட்டன. இன்று 20ம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏப்ரல் கடைசி வாரம் வரை டிக்கெட்கள் முன்பதிவு செய்ய முடியும்.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த காலங்களில் 120 நாட்கள் வரை ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் முறை இருந்தது. அப்போது வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவர்களுக்கு கடைசி நேரத்தில் கன்பார்மாக வாய்ப்புகள் அதிகம். தற்போது 60 நாட்களுக்குள் மட்டுமே டிக்கெட்கள் முன்பதிவு செய்யலாம் என்பதால் வெயிட்டிங் லிஸ்ட் கன்பார்ம் ஆவதில் சிக்கல் ஏற்படும்’ என்றார்.

Related Stories: