புதுகை தொடையூரில் ஜல்லிக்கட்டு 700 காளைகள் ஆவேச பாய்ச்சல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொடையூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள தொடையூரில் சக்தி விநாயகர் கோயில் திருவிழாவையொட்டி இன்று (20ம் தேதி) ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகள் அழைத்து வரப்பட்டது. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர். போட்டியை திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. டவுன் டிஎஸ்பி பிருந்தா தலைமையில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.

Related Stories: