அனுமதியில்லாமல் போராட்டம் நடத்திய விவகாரம் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தலைமையில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி விழுப்புரம் நான்கு வழிச்சாலை அருகில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதை சட்டவிரோதமாக கூடுவதாக கருத முடியாது என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று சி.வி.சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: