டெல்லி: ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளையும் சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டும் என டெல்லி ஏ.ஐ. தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறினார். இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறினார். 140 கோடி மக்களுக்கும் டிஜிட்டல் அடையாளத்தை இந்திய அரசு வழங்கியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிலைத்த ஏ.ஐ. தொழில்நுட்பமே தேவை என்று மேக்ரான் கருத்து தெரிவித்துள்ளார்.
