ஆளுநருக்கு அதிகார வரம்பு எவ்வளவு என கடிவாளம் போட்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: எம்எல்ஏ மார்கண்டேயன் பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) மார்கண்டேயன் பேசியதாவது: இடைக்கால பட்ஜெட்டின் பொதுவிவாதம் என்பதை விட 5 ஆண்டு ஆட்சியை சீர்த்தூக்கி பார்க்கின்ற விவாதமாக பார்க்கின்றேன். இந்த 5 ஆண்டில் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இந்த நாட்டின் மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநர் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜனாதிபதி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்.

அப்படி நியமன ஆளுநருக்கு எவ்வளவு அதிகார வரம்பு உள்ளது என்பதை கடிவாளம் போட்டு காண்பிக்கும் வகையில் தீர்மானத்தை முதல்வர் கொண்டுவந்துள்ளார். அந்த தீர்மானம் தான் கவர்னர் துணை வேந்தர்களை நியமிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து முதல்வர்களும் துணை வேந்தர்களை நியமிக்கலாம் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒன்றிய – மாநில அரசின் உறவு புத்தகம் தயாரித்து கொடுக்கப்பட்டுள்ளது அதனை வரலாற்று பொக்கிஷமாக கருதுகிறேன்.

ஒன்றிய அரசு சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்திற்கு நிதி தர மறுக்கிறது. ஆனால் நமது முதல்வர் தன்னிறைவான, சுகாதாரமான இனிமையான கல்வியை மாநிலம் முழுவதும் கொடுக்கும் நல்லாட்சியை செய்து வருகிறார். எனது சட்டமன்ற தொகுதி தண்ணீர் பற்றக்குறையை போக்க குளத்தை ஆழப்படுத்தி தருவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் கூறியிருந்தார். என்னுடைய கோரிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட குளத்தை ஆழப்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: