மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நாமக்கல்லில் நேற்று அளித்த பேட்டி: 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக, பாஜ அணியை தோற்கடிப்பது தான் எங்களின் முதன்மையான கடமையாகும். அதற்கேற்ற வகையில், எங்களின் தேர்தல் பணி இருக்கும். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், மாநில செயலாளர் சண்முகம், செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்கேற்ப போட்டியிடும் தொகுதிகளையும் அதிகப்படுத்த வேண்டும் என மாநில குழு முடிவு செய்துள்ளது. குறிப்பாக இரட்டை இலக்க தொகுதிகளை பெற வேண்டும். இதை பெறும் வகையில், திமுகவின் பேச்சுவார்த்தை குழு முன்பு, எங்களின் குழுவினர் முயற்சி மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
