அதிமுக, பாஜ தலைவர்களிடம் பேசியது என்ன? காரணம் சொல்லும் பிரேமலதா

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பட்ஜெட்டை முழுமையாக படித்து விட்டு, பதில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும். வருகின்ற ஆட்சி, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் எஜமானர்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும், பார்க்கலாம். உண்மையிலேயே அதுபோன்ற ஒரு சூழல் வருகிறதா? இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஈசா மையத்தில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் முதல் வரிசையில் இருந்தோம். ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, புதுச்சேரி அமைச்சர்கள் எல்லோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான். அதனால் தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் வரவேற்போம். அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: