4 எம்எல்ஏ சீட் வாங்கும்போது மாணிக்கம் தாகூர் கண்களுக்கு பாமர மக்கள் தெரியவில்லை: ரஞ்சன் குமார் காட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமார் பேசிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் அவர் கூறியதாவது: அதிகாரத்தில் பங்கு என்று யாருக்கு (மாணிக்கம் தாகூர்) கேட்கிறார். கடந்த தேர்தலில் 25 சட்டமன்ற தொகுதிகள் திமுக கூட்டணியில் பெற்றோம். 4 சட்டமன்ற தொகுதிகள் மாணிக்கம் தாகூருக்கு வழங்கப்பட்டது.

அந்த 4 சீட்டில், பொழுதுபோக்கு பூங்கா வைத்து இருக்கும் ஒருவருக்கும், பட்டாசு தொழிற்சாலை வைத்து இருக்கும் முதலாளிக்கும், எம்.பி மகனுக்கும், 4வது அவருடைய உறவினருக்கும் கொடுத்தார். தற்போது பேசுகிறார் நகர செயலாளர் அதிகாரத்திற்கு வர வேண்டும், உங்களுக்கு உரிமை வேண்டும் என்று கூறுகிறார்.

சீட் வாங்கி தரும் போது பாமர மக்கள் அவர் கண்களுக்கு தெரியவில்லை. அவருடன் பயணிக்கும், சாதாரண மக்களுக்கு அவர் சீட் வாங்கி கொடுத்ததில்லை, எந்த வாய்ப்பும் பெற்று தந்ததில்லை. இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் கூட பணம் அதிகம் உள்ள நபர்களை அவர் முன்னிறுத்துகிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் என்று போல் உள்ளது அவர் பேச்சு. இவ்வாறு அந்த காணொலி முடிகிறது.

Related Stories: