திமுக 5 ஆண்டு கால ஆட்சியில் 4,322 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்தது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திருப்பூர் எம்எல்ஏ சி.மகேந்திரன் (அதிமுக) பேசுகையில், ‘மடத்துக்குளம் தொகுதி, சோழமாதேவி குங்குமவள்ளியம்மன் உடனுறை குலசேகரசாமி கோயிலுக்கு தரைத்தளம் அமைத்து, சுற்றுச்சுவர் கட்ட அரசு ஆவன செய்யுமா’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

குங்குமவள்ளி குலசேகரசாமி கோயிலுக்கு ரூ.24 லட்சம் செலவில் ஏற்கனவே தரைத்தளம் அமைக்கின்ற பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது. ரூ.25 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் பணியானது, தரைதத்ளம் அமைக்கும் பணி நிறைவுற்ற பிறகு தான் மேற்கொள்ளப்படும்.

இந்த 5 ஆண்டு ஆட்சியில் தான் 4,192 கோயில்களுக்கு குடமுழுக்கை நடத்தியிருக்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் இந்த மாதத்தில் மட்டும் கூடுதலாக நடைபெறவுள்ள கோயில்களின் எண்ணிக்கை இதுவரையில் நாங்கள் அனுமதி அளித்திருப்பது 130 கோயில்களாகும். அதையும் சேர்த்து கணக்கிட்டால் இந்த மாத இறுதிக்குள் 4,322 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: