பாஜ அல்லறை சில்லரை ஐடி விங் அவதூறு பரப்புது… செல்வப்பெருந்தகையும், நானும் அண்ணன், தம்பி: மாணிக்கம் தாகூர் திடீர் பாசம்

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், நேற்று மதியம் மதுரை விமான நிலையத்தில் கூறியதாவது: சீர்மரபினர் சமூக கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து தலைமையிடம் பேசிவிட்டு தான் வந்தேன். என் மீது செல்வப்பெருந்தகை புகார் அளிக்கப் போவதாக கூறுகிறீர்கள். அது எல்லாம் ஒண்ணும் இல்லை. பத்திரிகையாளர்கள் இதை பெரிதாக ஆக்க வேண்டாம். இது அண்ணன், தம்பிகளுக்கு இடையிலான பிரச்னை. நாங்க எல்லாம் சகோதரர்கள். ராகுல் காந்தி தலைமையில் கார்கேவை தலைவராக ஏற்று, பலமான கட்சியாக உருவாக்குவதற்கு தான் எனது முயற்சி. ஆட்சியில் பங்கு குறித்து ராகுல் காந்தி கருத்தை நீங்கள் தான் கேட்க வேண்டும்.

காலையில் குட் மார்னிங் மெசேஜ்ல ஒரு பதிவை போட்டேன். பாரதியாரின் வார்த்தை அச்சமில்லை அச்சமில்லை என்றிருந்தது. அது தப்பான வார்த்தையா? மாணிக்கம் தாகூர் ராஜினாமா என வதந்தி பரவுது. பாஜ அல்லறை சில்லரை ஐடி விங் இப்படித்தான் செய்யும். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் நன்மைக்காக நடவடிக்கை எடுக்கப் போகிறது. தமிழ்நாடு மக்களின் நன்மைக்காக போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு முதல்வர் கூறியது போல், தமிழ்நாட்டிற்கு எதிர் டெல்லி என்பதற்குதான் போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்நாடு வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

* பெண்களை அசிங்கமாக பேசுவதுதான் பாஜ கல்ச்சர்
பெண் பிரபலங்களை பாஜ தலைவர்கள் விமர்சிப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ‘பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எப்படி பெண்களை பற்றி அவதூறாக பேசினாரோ தெரியாது. அதற்கு இப்போது வருத்தப்பட்டு இருக்கிறார். பாஜ மாவட்டத் தலைவர்களுக்கும் அந்த வியாதி ஒட்டியுள்ளது. அந்த வியாதியை தீர்க்க வேண்டியது முக்கியமான கடமை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜோதிமணியை பொறுத்தவரை சாதாரண குடும்பத்தில் பிறந்து, காங்கிரஸ் கட்சியில் உயர்ந்து எம்பியாக உள்ளார். அவரைப் பற்றி தவறான பேச்சுக்களை பேசக்கூடிய பாஜ நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும். கல்ச்சரையே பாஜ மாற்றி உள்ளது. நியூ இந்தியா என்று சொல்லி பாஜ நிர்வாகிகள் பெண்களை அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசுவது கைவந்த கலையாகிவிட்டது. பாஜ – ஆர்எஸ்எஸ்சின் கல்ச்சராக மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

Related Stories: