அர்ஜூன் சம்பத் கோர்ட்டில் சரண்

சேலம்: இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த 2022ல் போலீஸ் அனுமதியின்றி சேலம் ஜங்ஷன் தபால் அலுவலகம் முன்பு கட்சியினருடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 22பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இரண்டு வாய்தாவின் போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் 4 பேர் நேற்று ஜேஎம்2 நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அப்போது வாரண்ட்டை ரத்து செய்யும்படி அர்ஜூன் சம்பத் மனு அளித்தார். அதை ஏற்று அடுத்த விசாரணையை வரும் 4ம்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Related Stories: