மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் ராஜ்பால் விடுதலை?.. வதந்திக்கு மனைவி விளக்கம்

 

புதுடெல்லி: நடிகர் ராஜ்பால் யாதவ் சிறையிலிருந்து விடுதலையானதாகப் பரவிய தகவல் வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 9 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜ்பால் யாதவ் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார். அப்போது அவர் விடுதலையான போது நடிகர் சல்மான் கானுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

முன்னதாக காசோலை மோசடி வழக்கில் மீண்டும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் கடந்த 5ம் தேதி டெல்லி திகார் சிறையில் மீண்டும் சரணடைந்தார். ஆனால் அவர் மீண்டும் விடுதலையாகி விட்டதாகத் தவறான தகவல்கள் பரவின. தற்போது ராஜ்பால் யாதவ் டெல்லி சிறையிலேயே இருந்து வரும் நிலையில், அவரது மனைவி ராதா யாதவ் அந்தத் தகவல் உண்மைக்கு புறம்பானது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘அவர் இன்னும் திகார் சிறையில்தான் உள்ளார், அவர் விரைவில் விடுதலையாவார் என்று நம்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ராஜ்பாலின் கடன் பிரச்னையைச் சமாளிக்க சல்மான் கான், அஜய் தேவ்கன், சோனு சூட் மற்றும் நவாஸுதீன் சித்திக் போன்ற நடிகர்கள் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

Related Stories: